தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் நமக்கு முதலில் தோன்றும் பெயர் கவுண்டமணி. தனது சிறந்த காமெடியின் மூலம் பல கோடி ரசிகர்களை தக்க வைத்துள்ளவர் காமெடி நடிகரான கவுண்டமணி. சமீபகாலமாக காமெடியனாக நடிக்க விட்டாலும் அவ்வப்போது ஹீரோவாக தோன்றி வருகிறார்.இவரை நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக யாரும் பார்த்துவிட முடியாது அந்த அளவிற்கு கட்டுக்கோப்புடன் வாழ்ந்து வருகிறார் கவுண்டமணி.
இவர் 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு காமெடியனாக அறிமுகமானார் ஆனால் இதற்கு முன்பாக அவர் நாடக மேடைகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன்பின் அவர் வெள்ளி திரையில் காணப்பட்டார். இவர் காமெடியன் ஆவதற்கு முன்பாக ஒரு சில படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கிளி ,சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் 16 வயதினிலே என்ற படத்தில் காமெடியானாக நடித்தார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றார் இவர் காமெடியனாக இதுவரையிலும் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் காமெடியில் இவரது பாட்டனார் செந்திலுடன் இணைந்து 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கவுண்டமணி அவரது மனைவி சாந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது கவுண்டமணிக்கு சுமத்திரா மற்றும் செல்வி என்ற இரு மகள்கள் உள்ளனர். மேலும் கவுண்டமணி பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.