சூப்பர் சிங்கர் பிரபலம் “செந்தில் ராஜலட்சுமி” -யை நீங்கள் திருமண கோலத்தில் பார்த்தது உண்டா.? இதோ அந்த அழகிய புகைப்படம்.

senthil rajalaxmi

விஜய் டிவியில் பல்வேறு விதமான சூப்பர் நிகழ்சிகள் மக்களை கவர்ந்து வருகிறது. அதில் ஒன்றாக பார்க்கப்படுவது தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை தற்போது அடுத்த அடுத்த சீசன்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. தனது திறமையை வெளிக்காட்டி பரிசு தொகையை பெறுவதோடு மட்டுமல்லாமல் அந்த பிரபலம் வெள்ளித்திரையிலும் கால்தடம் பதித்து தனது திறமையை காட்டுகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் 6 வது சீசனில் அறிமுகமானவர்தான் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே அவர் நாட்டுப்புற பாடல்களை பல இடங்களில் பாடி ஒரளவுக்கு பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்களை சிறப்பாக பாடி மக்களை வழிபடுவதோடு இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பெரிய அளவில் ரீச் ஆனது. மேலும் இந்த போட்டியில் கடைசியாக டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை செந்தில் சிறப்பாக பாடி கைப்பற்றினார்.

பிறகு வெள்ளித்திரையில் அஜித்தின் விசுவாசம் மற்றும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் பாடி தனது லெவலை வேற லெவலுக்கு உயர்ந்தி கொண்டு தற்போது வெளிநாடு மற்றும் இந்தியாவை சுற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று பாடலைப் பாடி வருகின்றனர்.

ராஜலட்சுமி மற்றும் செந்தில் பல்வேறு சீரியல் நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வலம் வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் திருமணம் செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் கசிந்துள்ளது. மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

senthil
senthil