ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலின் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்த அவர்தான் நடிகை நக்ஷத்ரா. இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று அதனால் மிகப் பெரிய அளவில் ரீச்சானார். மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக பல விருதுகளையும் பெற்றவர்.
இப்படிப்பட்ட நிலை இவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் “நக்ஷத்ரா பாதுகாப்பாக இல்லை அவள் காதலிப்பவரின் குடும்பமே அவளை லாக் செய்து வைத்திருக்கிறது. நக்ஷத்ராவை மீட்க உதவுங்கள்” என்கின்ற ஸ்ரீ நிதியின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது.
அதற்கு பதிலளித்த நக்ஷத்ரா ” கடந்த சில நாட்களாக நான் ஏதோ பிரச்சனையில் இருக்க வேண்டும் வதந்தி பரப்பி கிட்டு இருக்கு என யாரோ கடை தீப்பிடித்து வச்சுருக்காங்க, எங்கேயும் விடாம வச்சிருக்காங்க என்றெல்லாம் சொல்லிகிட்டு இருக்காங்க. தினமும் சூட்டிங் போயிட்டு தான் வந்துகிட்டு இருக்கேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
நட்சத்திரா திருமணம் செய்ய போகிறார் என பல தகவல்கள் சின்னத்திரையில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காமல் இருந்து வந்தது மேலும் நக்ஷத்ராவை யார் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் நக்ஷத்ராவை திருமணம் செய்து கொள்ளப் போகும் விஷ்வாவிடம் இதனைப் பற்றி கேட்டபொழுது இரு வீட்டாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நல்லதொரு முடிவெடுக்கும்போது நாங்களே முறைப்படி மீடியாவுக்கு அறிவிக்கலாமுனு இருக்கோம் என்று கூறியுள்ளார்.
பிறகு விஷ்வா ஸ்ரீநிதி தனது குடும்பத்தைப் பற்றிச் சொன்னது எதுவுமே உண்மை கிடையாது. அந்த பொண்ணு மன அழுத்தத்தில் இருக்காங்க மெண்டலி பாதிக்கப்பட்டு ஏதோ பேசிக்கொண்டு இருக்காங்க என்று கூறியுள்ளார்.