தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பல முன்னணி ஜாம்பவான்கள் அவர்களுடன் இணைந்து காமெடியிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வடிவேலு. என்னதான் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் இவரது காமெடிதான் இளசுகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இழுத்தது.
காமெடியனாக திரை உலகில் அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரையிலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது பாடி லாங்குவேஜை மாற்றிக்கொண்டு தனது சிறந்த காமெடியை வெளிப்படுத்துவார். மக்களை மகிழ்வித்து வந்த இவர் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் போனார். இருப்பினும் மீம்ஸ் கிரியேடர் அவர்கள் இவரை வைத்து பல காமெடிகளை உருவாக்கி கொண்டிருந்ததால் ரசிகர்கள் வடிவேலுவை தற்பொழுதும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
23ம் புலிகேசியின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவானது ஆனால் தயாரிப்பாளர் சங்கருக்கும் வடிவேலுக்கு சில வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு சினிமாவில் நடிக்கக்கூடாது என நிபந்தனை விதித்திருந்தார்.பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு சமீபத்தில் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் முதலில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அதன்பிறகு லைக்கா நிறுவனத்துடன் கை கோர்த்து நான்கு படங்களில் நடிக்கிறார். இப்படி வெற்றியை நோக்கி ஓட ரெடியாக இருக்கிறார் நடிகர் வடிவேலு இந்த நிலையில் நடிகர் வடிவேலுவை அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும் ஒரு நபரின் புகைப்படமும் வெளியாகி உள்ளது.
அவர் வேறு யாருமல்ல நடிகர் வடிவேலுவின் தம்பி தானாம் மதுரையில் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் கசிந்த தீயாய் பரவி வருகிறது இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
