சினிமாவில் சமீப காலமாக பல நடிகர் மற்றும் நடிகைகள் திடீர் திடீரென உடல் நலக்குறைவால் அசம்பாவிதம் நடந்து வருகிறது. இது சினிமா துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகர்களாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் மயில்சாமி.
இவர் தன்னுடைய காமெடியால் மக்களின் கவலையை மறக்கச் செய்து சிரிக்க வைத்த ஒரு உன்னதமான நடிகர் இவர் சமீபத்தில் திடீரென மரணம் அடைந்தார் இவருடைய திடீர் இழப்பு திரைத்துறையினர் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவருடைய இறப்பிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் மக்கள் என பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் மயில்சாமியின் பழைய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. மயில்சாமியின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே மயில்சாமி பற்றிய பிரபலங்களின் கருத்து மற்றும் நல்ல விஷயங்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் மயில்சாமி கூறியதை தற்பொழுது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் பிரபலங்கள் இந்த நிலையில் மறைந்த சின்ன கலைவாணர் விவேக் மயில்சாமி பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது 2018 ஆம் ஆண்டு மயில்சாமி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் காசு மேல காசு இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அப்பொழுது நடைபெற்றது அந்த விழாவில் விவேக் நடிகர் மயில்சாமி குறித்து பேசியுள்ளார்.
அதில் கூறியதாவது மயில்சாமி என்னை விட வயதில் மூத்தவன் இருப்பினும் நான் அவனை வாடா போடா என்று தான் அழைப்பேன் இவனை பத்தின விஷயங்கள் கதையை சொன்னால் பாரதிராஜா கூட படம் எடுக்கிறேன் என்பார் அந்த அளவு இவனை இளிச்சவாயனா நல்லவனா என்றால் இளிச்சவாயன் நல்லவன் என்று தான் சொல்லணும் இப்படி ஒரு மனுஷன் நம்முடன் வாழ்வது அதிலும் இந்த காலத்தில் இப்படி வாழ்வது என்பது பெரிய விஷயம்.
யார் என்ன கேட்டாலும் தன்னிடம் உள்ளதை அப்படியே கொடுத்து விடுவார். அப்படிதான் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பொழுது கடலூர் பகுதியில் உள்ள கிராமத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபாராய் சென்று உதவி செய்து வந்தார். இது தெரிந்து மயில்சாமி நாமும் ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணி அடுத்த நாள் விவேக் ஓபராய் வீட்டிற்கு சென்று யுவர் சர்வீஸ் சூப்பர் என கூறிவிட்டு தன் கழுத்தில் அணிந்து இருந்த தங்கத் டாலரை பரிசாக கொடுத்து விட்டு வந்துள்ளார்.
அந்த அளவு ஒரு உன்னதமான நடிகர். இந்த நிலையில் மயில்சாமியின் குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் மயில்சாமி மகன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.