பிரபல நம்பர்-1 தொலைக்காட்சியான சன் டிவியில் புது புது கதைகளத்துடன் காலை முதல் இரவு வரை பல்வேறு சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் மக்களின் மனங்கவர்ந்த சீரியல்களில் ஒன்று சுந்தரி தொடர். இந்த சீரியல் வந்த சில நாட்களிலேயே மக்களிடையே நல்ல ரீச் அடைந்து சிறப்பாக பயணித்து வருகின்றன.
மேலும் இந்த சீரியல் தமிழ் சீரியல்களிலே தொடர்ந்து டிஆர்பி யிலும் முன்னிலையில் உள்ள சீரியல் ஆகும். இந்த சீரியலில் சுந்தரி மிகவும் கருப்பு நிறத்தில் உள்ளதாக ஹீரோவுக்கு சுந்தரியை பிடிக்காமல் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டு அந்த பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.
தற்போது இந்த செய்தி சுந்தரிக்கு தெரிய வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று வருவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி சிறப்பாக பயணித்து வருகின்றன. இந்த நிலையில் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் கேப்ரில்லா முதலில் டிக்டாக் மூலம் மக்களிடையே அறிமுகமாகியவர்.
மேலும் இவர் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து ஐரா திரைப்படத்திலும் கேபிரில்லா நடித்துள்ளார். பின்பு இந்த சுந்தரி சீரியலின் மூலம் அனைத்து குடும்பங்களிலும் அறிமுகமானவர் ஆவார். கேப்ரில்லா சில வருடங்களுக்கு முன்பு நீண்ட வருடங்களாக காதலித்து வந்த ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அந்த வகையில் தற்போது கேப்ரில்லா அவரது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம் நீங்களே பாருங்கள்.