தமிழ் சினிமா உலகில் இப்போது பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் 90 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவர் கவுண்டமணியுடன் கைகோர்த்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்துள்ளன.
அதேசமயம் கவுண்டமணி செந்தில் காமெடி இப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. செந்தில் காமெடி கதாபாத்திரங்களையும் தாண்டி முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். 90 காலகட்டத்தில் சிறப்பாக பயணித்து ஓடிக்கொண்டிருந்தாலும்..
ஒரு கட்டத்தில் வயசாக வயசாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கினார் 2019ஆம் ஆண்டு பிஸ்தா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதும் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் செந்தில் தான் பிறந்த ஊரில் இருக்கும்..
அந்த பழைய வீட்டை பராமரித்து கொண்டு தான் இப்பொழுதும் இருக்கிறார் அதன் புகைப்படங்கள் கூட தற்போது வெளிவந்துள்ளன. நடிகர் செந்தில் ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் கிராமமாகும். தனது சொந்த ஊரில் பழைய வீட்டை புதுப்பித்து தற்பொழுது வைத்திருக்கிறார். இதோ காமெடி நடிகர் செந்தில் வாழ்ந்து வந்த அந்த வீட்டை நீங்களே பாருங்கள்.