பிக்பாஸ் “பாலாஜி முருகதாஸ்” வாங்கிய புது மாட்டை பார்த்து உள்ளீர்களா.? வைரலாகும் வீடியோ.!

balaji-murugadoss-
balaji-murugadoss-

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை வெற்றிகரமாக ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் ஆறாவது கட்ட சீசன் தொடங்கப்பட இருக்கிறது இதற்கு இடையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியையும் மக்கள் பார்த்து கண்டு களித்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பட வாய்ப்புகளை அள்ளி பலர் வருகின்றனர். அந்த வகையில் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார் பிக் பாஸ் வீட்டில் இவருக்கும் ஆரிக்கும்  தொடக்கத்தில் இருந்து மிகப்பெரிய வார்த்தை போர் மற்றும் சண்டைகள் எல்லாம் நடந்தது அதன் மூலம் பிரபலமடைந்தார்.

மறுபக்கம் சிவானி நாராயணன் உடன் ரொம்ப நெருங்கி பழகினார் காதலிலும் விழுந்தார் இதனால் பிரபலமடைந்தாலும் பெயர் கெட ஆரம்பித்தது. இதனால் அவரால் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியாமல் வெளியேறினார். வெளியே வந்த பிறகும் பாலாஜி முருகதாஸ் ஷிவானி நாராயணன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.

இனிமேல் இப்படி சுத்தி கொண்டு இருந்தால் தம்முடைய கேரியர் கிளோஸ் ஆகிவிடும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தற்பொழுது கெரியரை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மேலும் பாலாஜி முருகதாஸ் புதிதாக ஒரு மாடு வாங்கி உள்ளார்.

அந்த மாடு வேற எதுவும் அல்ல bmw காரை தான் அவர் புதுவிதமாக மாடு என பெயர் வைத்து கூப்பிட்டு உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்தும் லைக்குகளை அள்ளி வீசியும் வருகின்றனர். பாலாஜி முருகதாஸ் அந்த bmw மாட்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

bmw car
bmw car
bmw car
bmw car