சினிமாவுலகில் புதுமுக நடிகைகள் பலரும் வருவதற்கு புதுமுக இயக்குனர்கள் மற்றும் படத்தின் பட்ஜெட் கம்மி என்பதால் காலடிகளை எடுத்து போட முடியாது என்பதால் திறமையுள்ள புதுமுக நடிகைகளை கண்டுபிடிக்கின்றனர் இயக்குனர்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் சுனைனா இவர் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடிகர் நகுகலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானர்.
முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த திரைப்படங்களில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாததால் ஒருகட்டத்தில் ஆளில்லை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இருப்பினும் தற்போது சற்று உடல் எடையை ஏற்றி கும்முன்னு இருப்பதால் இப்பொழுதும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் சுனைனா ட்ரிப், சில்லுக்கருப்பட்டி போன்ற திரைப் படங்களில் தலைகாட்டி மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். மேலும் சுனைனா மீண்டும் நடிகர் நகுளுடன் இணைந்து “எரியும் கண்ணாடி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு எதிர்பார்ப்பு இந்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இப்படி இருக்க நடிகை சுனைனா தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
மேலும் புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் உங்க அம்மாவை அப்படியே உரித்து வைத்து இருக்கிறீர்கள் என கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். நடிகை சுனைனா மற்றும் அவரது அம்மா அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.