சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகர் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு தெரிந்து கொண்டால் மட்டுமே சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் மற்றும் நீண்ட தூரம் பயணிக்க முடியும் அந்த வகையில் தனுஷ் சரியாக காய் நகர்த்தி தற்போது சிறப்பாக செய்து வருகிறார்.
அவர் நடிப்பில் சமீபகாலமாக வருகின்ற திரைப்படங்கள் அனைத்து படங்களும் மக்களை கவர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வேட்டையை நடத்துவதால் தனுஷ்க்கு தற்போது இந்திய அளவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அதன் காரணமாகவே தற்போது இந்தி தெலுங்கு மற்றும் பாலிவுட் பக்கமும் இயக்குனர்கள் அவரை தட்டி தூக்கி வருகின்றனர்.
தற்பொழுது தனுஷ் மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதை முடித்த கையோடு அடுத்ததாக தனுஷ் தொடர்ந்து நான்கு தெலுங்கு படங்களில் நடிக்க இருக்கிறார் இருப்பினும் தனுஷ் தனது சம்பளத்தை மட்டும் குறைத்துக்கொண்டு நடிப்பதால் தான் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தது.
மேலும் சினிமா உலகில் நல்ல பெயரையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இப்படியே இருந்து கொண்டு ரஜினியின் இடத்தை சைலண்டாக அவர் பிடிப்பார் என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரு மகன்களுடன் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் ஒரு ஆடம்பர வீட்டில் வசித்து வருகின்றனர்.
இப்பொழுது தனுஷ் வீட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வருகின்றன. இந்த பிரம்மாண்ட வீட்டில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா என்ன பண்ணுகிறார்கள் பாருங்கள்.