தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான ஹிட் படங்களை கொடுத்தவர் கேஎஸ் ரவிக்குமார் அந்தவகையில் 2006ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் அஜித்தை வைத்து வரலாறு என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து அசின், கனிகா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தில் அஜீத் மூன்று விதமான ரோல்களில் நடித்து இருந்தார் ஹீரோ வில்லன் மற்றும் அப்பா என மூன்று கேரக்டரிலும் தனக்கான பங்களிப்பை சிறப்பாக கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருந்தால் படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது வசூலில் 25 கோடியை ஈட்டியது.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் அஜித் இளமைப் பருவத்தில் அவரது கதாபாத்திரத்தில் ஜீவா என்ற ரோலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னி பெடல் எடுத்த சிறுவனின் உண்மையான பெயர் சச்சின் லக்ஷ்மணன்.
இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது. இதோ அந்தப் பையனின் புகைப்படம்.