தமிழ் சினிமா உலகில் நடன கலைஞராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் ஹீரோவாக வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தவர் நடிகர் பிரபுதேவா.. ஆரம்பத்தில் இவர் இந்து, காதலன், ராசையா, மிஸ்டர் ரெமோ, மின்சார கனவு, விஐபி என தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த..
இவர் நிஜ வாழ்க்கையில் சில சர்ச்சைகளிலும் சிக்கினார் ஆம் நடிகை நயன்தாராவுடன் இவர் நெருக்கமாக இருந்தார் மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு தகவல்கள் அப்பொழுது வெளிவந்தன இந்த சர்ச்சையை அப்போ பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழ் பக்கமே இவர் வராமல் ஹிந்தி பக்கம் படங்களில் நடித்தும், இயக்கியும் வெற்றி கண்டு வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது பிரபுதேவா தமிழ் சினிமா பக்கம் வந்து தொடர்ந்து படங்களில் நடிக்கிறார் ஆனால் இவர் நடிக்கும் படங்களில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அந்த படங்கள் வசூல் ரீதியாக தோல்வி அடைகின்றன. இருப்பினும் பட வாய்ப்புகள் அதிகமாக வருவதால் தனது சம்பளத்தை உயர்த்தி வருகிறார் பிரபுதேவா..
நாம் அண்மை காலமாக திரை உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம், சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு மற்றும் அவர்கள் வாழ்ந்து வரும் வீட்டை பார்த்து வருகிறோம் அதன்படி இப்பொழுது நடிகர் பிரபுதேவா வாழ்ந்து வரும் வீட்டின் புகைப்படம் வெளியே கசிந்து உள்ளது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களைப் போலவே உங்கள் வீடும் அழகாக இருக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகர் பிரபுதேவா வாழ்ந்து வரும் அந்த பிரம்மாண்ட வீட்டின் புகைப்படத்தை..