தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகர் யோகி பாபு வில்லனுக்கு அடியாளாக ஒரு ஓரமாக காமெடியனாகவும் நடித்து ஓடினார் ஆனால் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்ட யோகி பாபு ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர் போல அசால்டாக ஆரம்பத்திலேயே சிறப்பான காமெடியை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்து பிரபலம் அடைந்தார். தற்பொழுது நடிகர் யோகி பாபு முன்னணி நடிகர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சோலோ படங்களிலும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இதனால் யோகி பாபுவின் திரைப்பயணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இப்பொழுது கூட பாலிவுட் பக்கம் திசை திரும்பி உள்ளார் ஆம் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார் மேலும் பல்வேறு முன்னணி நடிகரின் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சினிமாவில் இவர் நடிக்காத படங்களே அண்மை காலத்தில் இல்லை என சொல்லப்படுகிறது.
சினிமாவின் மூலம் நல்லா சம்பாதிக்கும் யோகி பாபு அவ்வப்போது சில நலத்திட்ட உதவிகளையும் செய்து அசத்துகிறார். அதனால் அனைவருக்கும் பிடித்த ஒரு ஹீரோவாக யோகி பாபு பார்க்கப்படுகிறார். அண்மை காலமாக நாம் சினிமா பரபலங்கள் வசிக்கும் வீடுகளை பார்த்து வருகிறோம்.
அதுபோல தற்பொழுது யோகி பாபுவின் வீட்டின் புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது. யோகி பாபு சில வருடங்களுக்கு முன் சென்னையில் பெரிய வீடு ஒன்று கட்டி உள்ளார் அது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த வீட்டிற்கு விசாலாட்சி இல்லையம் என பெயர் வைத்து கட்டி உள்ளார் இதோ நீங்களே பாருங்கள் யோகி பாபுவின் அந்த வீட்டை..