தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடியனாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்தவர் நாகேஷ். இவர் முதலில் மெட்ராசுக்கு நடிக்க தான் வந்தார் ஆனால் எதிர்பாராத விதமாக ரயில்வே நிலையத்தில் வேலை பார்த்தார்.
பின் ஒரு கட்டத்தில் நடிப்புதான் தன்னை அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்லும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட நாகேஷ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் 60 லிருந்து 90 வரை பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து மக்களை மகிழ்வித்து வந்தவர் காமெடி நடிகர் நாகேஷ்.
சினிமா ஆரம்பத்தில் இவர் காமெடியனாக சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்ந்து கொண்டார். மேலும் தொடர்ந்து பல்வேறு இளம் நடிகர்கள் படங்களிலும் தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி சகஜமாக ஓடியவர்.
இவரைத் தொடர்ந்து பின்வந்த இவரது மகன் சினிமாவில் பெரிய அளவு ஜொலிக்கவில்லை என்றாலும் அப்பாவின் சொத்தை அதிக அளவில் அழிக்காமல் தனது குடும்பத்தையும் சொத்தையும் பராமரித்து வருகிறார் அந்த வகையில் காமெடி நடிகர் நாகேஷ் வளர்ந்து வாழ்ந்த..
வீட்டை இன்னும் பராமரித்து கொண்டு வருகிறார். தற்பொழுது கூட அந்த வீடு பளபளப்பாக இருக்கிறது. இதோ நீங்களே பாருங்கள் நடிகர் நாகேஷ் வாழ்ந்த அந்த வீட்டின் புகைப்படத்தை..