லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னையில் வாழ்ந்து வரும் வீட்டை பார்த்துள்ளீர்களா.. கவர்ந்து இழுக்கும் புகைப்படம்.

nayanthara
nayanthara

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நயன்தாரா கடைசியாக தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தில் இவருடன் இணைத்து விஜய் சேதுபதி, சமந்தா, யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளன.

படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் நல்ல வேட்டை நடத்தியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா பாலிவுட் பக்கம் திசை திருப்பியுள்ளார் பாலிவுட் சினிமாவில் கிங்காக வலம் வரும் ஷாருக்கானுடன் இணைந்து லயன் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணத்திற்கு தயாராகி உள்ளனர். இவர்கள் இருவரும் வருகின்ற ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் பத்திரிகைகள் கூட அடிக்கப்பட்டு இணையதளத்தில் லீக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கி நயன்தாரா கல்யாணத்திற்கு சினிமா பிரபலங்கள் 20 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது திருமணம் முடிந்த பிறகு மிகப்பெரிய நட்சத்திர விடுதியில் ரிஷப்ஷன் வைப்பார்கள் என கூறப்படுகிறது. இது ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னையில் ஒரு வீட்டில் வசிக்கிறார் என்று தான் நாம் செய்திகள் வெளிவந்தது.

ஆனால் உண்மையில் அவர் மிகப்பெரிய ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு வீடு அல்ல இரண்டு வீட்டில் வசித்து வருகிறாராம் அதன் புகைப்படங்கள் கூட தற்போது வெளிவந்துள்ளது சென்னையை தாண்டி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹைதராபாத் ஆகிய இடங்களில் மிகப்பெரிய வீடுகளை வாங்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

nayanthara
nayanthara
nayanthara house
nayanthara house