தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது இது தற்போது வரை ஐந்து சீசன்கள் நிறைவடைத்துள்ளன இந்த ஐந்து சீசனையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டவரில் ஒருவர் தாமரைச்செல்வி.
இவர் ஒரு மேடை நாடக கலைஞர் மற்றும் மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவர் ஆவார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிக் பாஸ் பற்றிய புரிதல் அதிகமில்லாமல் தான் கலந்து கொண்டார் ஆரம்பத்தில் வெகுளித்தனமாக விளையாண்ட தாமரைச்செல்வி ஒவ்வொரு விஷயமாக தெரிந்து கொண்டு பின்பு சிறப்பாக விளையாடி பிக் பாஸ் சீசன் 5யில் நீண்ட நாட்கள் பயணித்தார்.
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி இதுலயும் பிரபலம் அடைந்தார் தற்போது தாமரைச்செல்வி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் தனது கணவர் பார்த்தசாரதியுடன் இணைந்து ஜோடியாக நடனமாடி வருகிறார்.
தாமரைச்செல்வி நடனத்திலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் 5 யில் பேசிய தாமரைச்செல்வி நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்திருக்கேன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு சின்ன கிராமத்தில் ஓலை வீட்டில் தான் எனது அம்மா அக்கா தம்பி போன்றவர்களை..
இன்னும் நான் சம்பாதித்து பணம் கொடுத்து பார்த்து வருகிறேன் என பேசி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் தாமரைச்செல்வி வளர்ந்து வாழ்ந்த அவரது அம்மா வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த புகைப்படத்தை தாமரைச்செல்வியின் ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகின்றன.