தமிழ் சினிமாவில் நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்கு பிறகாக காமெடியில் கை சிறந்த நடிகையாக விளங்கி வரும் ஒரு நடிகை என்றால் அது காமெடி இளவரசி கோவை சரளாதான்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.
மேலும் நமது நடிகை கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அதுமட்டுமில்லாமல் நமது நடிகை வெறும் ஒன்பதாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார் சிறு வயதிலிருந்து அவருக்கு மேடை நாடகங்களில் அதிக அளவு ஆர்வம் இருந்ததை தொடர்ந்து அவர் சினிமாவில் நுழைய ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது எனவோ முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தான் இதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளது மட்டும் இல்லாமல் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக திரை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கோவை சரளா தன்னுடைய வாழ்நாளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் நடிகை கோவை சரளா திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாக நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் வலம் வந்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை வேலைக்காக கோவை சரளாவின் மொத்த குடும்பமும் கோவைக்கு வந்து விட்டார்கள் அந்த வகையில் தன்னுடைய 15 வயது வரை கோவை சரளா அந்த வீட்டில் தான் வாழ்ந்து வந்தார் அதன் பிறகு அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். ஆனாலும் கோவை மாவட்டத்தில் கோவை சரளாவிற்கு சொந்த வீடு ஒன்று உள்ளது அது மட்டும் இல்லாமல் அந்த வீட்டிற்கு அருகே அவருடைய அம்மாவிற்கும் ஒரு வீடு உள்ளது
மேலும் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கோவைக்கு வந்து அந்த வீட்டில் நேரத்தை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இவர்களின் வீட்டிற்கு அருகில் தான் கோவை சரளாவின் சகோதரியின் வீடும் உள்ளது அதுபோல கோவை சரளா தாயார் 94 வயதாகியும் என்றும் ஆரோக்கியத்துடன் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்..