சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் முக்கியமான ஒருவர் மா கா பா ஆனந்த். இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் விஜய் டிவி குடும்பத்தின் விருது விழாவில் தொகுப்பாளராக பல விருதுகளையும் வாங்கியவர் ஆவார்.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் விஜய் டிவியில் ராமர் வீடு, முரட்டு சிங்கிள்ஸ் போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளை சோலோவாகவும் நடத்தி வந்தவர்.
சின்னத்திரையில் மற்றொரு பிரபலமான தொகுப்பாளி பிரியங்கா இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளதால் இவர் தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தற்போது மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இவர் வெள்ளித்திரையிலும் வானவராயன் வல்லவராயன், கடலை, மீசைய முறுக்கு, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், பஞ்சுமிட்டாய் போன்ற சில படங்களிலும் சிறப்பாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்தவர் . இருந்தும் வெள்ளித்திரையில் இவரால் பெரிதும் பிரபலம் அடைய முடியவில்லை.
அதனால் பின்பும் விஜய் டிவி பக்கமே வந்து அவரது ஆங்கரிங் துறையையே சிறப்பாக செய்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது மா கா பா ஆனந்தினுடைய அழகிய வீட்டின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ மாகாபா ஆனந்த் வீட்டின் அழகிய புகைப்படங்கள்.