இயக்குனர் பாக்யராஜுக்கு சொந்த ஊரில் இருக்கும் வீட்டை பார்த்து உள்ளீர்களா.! இதோ புகைப்படம்.

pakkiyaraj
pakkiyaraj

80 90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் பாக்கியராஜ் இவர் சினிமா உலகில் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார் அந்த வகையில் நடிகர் பாக்கியராஜ் நடிகராகவும், இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

இவர் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார் முந்தானை முடிச்சு, சின்ன வீடு என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு சிறப்பான படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து ஓடிக் கொண்டிருந்த இவர் 1981 ஆம் ஆண்டு பிரவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதனார்.

பின் 1984 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சரண்யா மற்றும் சாந்தனு என மகன் மற்றும் மகன் இருக்கின்றனர். இருவருமே சினிமா உலகில் அறிமுகமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சினிமா உலகில் தலை காட்டிக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பாக்கியராஜ் தனது சொந்த ஊரில் இருக்கும் வீட்டின் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

பாக்கியராஜ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளாங் கோவில்  கிராமத்தில் பிறந்தார் அங்கு இவருக்கு  வீடு  இருக்கிறது அந்த வீட்டில் தான் பாக்யராஜ் பிறந்து வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பாக்யராஜ் எப்போதுமே பழசை மறக்காதவர் அந்த வகையில் தனது சொந்த ஊரில் இருக்கும் பழைய வீட்டையும் இப்பொழுதும் பராமரித்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது இதோ பாருங்கள்அந்த வீட்டின் புகைப்படத்தை..

pakkiyaraj house
pakkiyaraj house