கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் தான் வடிவேலு செந்தில், கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் என்று கூட கூறலாம் மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு என்று தமிழ் சினிமாவில் நிரந்தரமாக இடம் கிடைத்துவிட்டது.
ஒரு கட்டத்தில் வடிவேலு இல்லாத திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு இவர் அனைத்து நடிகர்களின் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் காமெடி நடிகராக அறிமுகமான இவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அவ்வாறு பார்த்தால் இவர் இருபத்தி மூன்றாம் புலிகேசி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் மேலும் இவர் தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் நடித்ததோடு சரி இன்னும் சினிமாவிற்கு வரவில்லை.
பொதுவாகவே வடிவேலுவின் திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்ப்பார்கள் அந்த வகையில் இவர் தற்போது சினிமாவில் நடிக்க முடியவில்லை என்றாலும் கூடிய சீக்கிரம் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இவரை பற்றி நாம் பல தகவல்கள் அறிந்து இருப்போம்.
அதேபோல் சங்கருடன் இவருக்கு இருக்கும் வாக்குவாதம் முடிந்ததும் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.இதனைத் தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்த எலி,தெனாலிராமன்,23ஆம் புலிகேசி போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும்.
இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினரை நாம் அதிகம் சமூக வலைதளங்களில் பார்க்கலாம் ஆனால் இவரது பிரம்மாண்ட வீட்டைப் பற்றி நாம் பார்த்திருக்க முடியாது.அந்த வகையில் இவரது வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வடிவேலுவின் வீடா இது என ஆச்சரியப் பட்டு இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.