80 -களில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவியின் சொந்த ஊரில் இருக்கும் அவரது வீட்டை பார்த்து உள்ளீர்களா.? இதோ புகைப்படம்.

sree-devi
sree-devi

80,90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி இவர் முதலில் 1969 ஆம் ஆண்டு துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஒரு கட்டத்தில் ஹீரோயின்னாக இவர் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தார் ஆள் பார்ப்பதற்கு அழகாகவும், படத்தில் திறமையை சூப்பராக வெளிப்படுத்தியதனால்..

ஒரு சமயத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்தார். மேலும் தமிழை தாண்டி கன்னடம் மலையாளம் இந்தி தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெற்றியை கண்டார் ஸ்ரீதேவி ஒட்டுமொத்தமாக 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக மாம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவரை தொடர்ந்து அவரது இரு மகள்களும் தொடர்ந்து சினிமா உலகில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கின்றனர் இவரது கணவர் போனி கபூர் ஹிந்தியில் நல்ல நல்ல படங்களை தயாரித்துக் கொண்டிருந்த இவர் தமிழ் பக்கமும் தற்போது தொடர்ந்து அஜித்தை வைத்து படங்களை தயாரித்து வருகிறார்.

இதனால் போனி கபூரின் மார்க்கெட்டும் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் நாம் அண்மைக்காலமாக பிரபலங்களின் வீடுகளை பார்த்து வருகிறோம் அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி தனது சொந்த ஊரில் வாழ்ந்து வளர்ந்த வீட்டின் புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் சிவகாசி பக்கத்தில் உள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் தான் அவர் பிறந்தார். அந்த வீடு இப்பொழுது கூட நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது ஸ்ரீதேவியின் பெரியப்பா அவர்கள் வசித்து வருகிறார் இதோ நடிகை ஸ்ரீதேவி வாழ்ந்து வளர்ந்த அந்த பழமையான வீட்டை நீங்களே பாருங்கள்..

sree-devi
sree-devi