ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இதற்கு முன்பு குறு படங்கள் பலவற்றையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றினை பெற்றது
மேலும் இது திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் மிகப்பெரிய வெற்றியினை சந்தித்தார். வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து அமோக வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சரத்குமார், ராதிகா என ஏராளமான திரைப்படங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இவ்வாறு மேலும் ஏராளமான புது முக கதாபாத்திரங்கள் லவ் டுடே திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த நிலையில் இந்த அளவிற்கு புதுமுக பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்ற திரைப்படம் லவ் டுடே திரைப்படம் மட்டும் தான் என பலராலும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி தயாரிப்பாளர்கள் பிரதீப் ரங்கநாதனை அனுகி வருகிறார்களாம். அந்த வகையில் தற்பொழுது விஜய்யின் வாரிசு திரைப்படத்தினை தயாரித்த தில்ராஜ் சமீபத்தில் பிரதீப்பை நேரில் சந்தித்து கதை கேட்டுள்ளார். எனவே விரைவில் தில்ராஜ் மற்றும் பிரதீப் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக இருக்கிறது.
மேலும் நடிகர்கள் விஜயை சந்தித்து பிரதீப் கதையை கூறியதாகவும் அது விஜய்க்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் சமீப பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் எனவே தொடர்ந்து ஏராளமான பிரபலங்களுடன் பிரதீப் ரங்கநாதன் கைகோர்த்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இயக்குனரும் நடிகருமான பிரதீபின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.