90 காலகட்டங்களில் இருந்து நடித்து தற்போது வரையிலும் சினிமாவில் ஓடி கொண்டு இருப்பவர் அரவிந்த்சாமி. ஆள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ஆரம்பத்தில் ஓரிரு திரைப்படங்களே நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது அதன்பிறகு வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
பல வருடங்கள் கழித்து கெளதம் கார்த்தி நடிப்பில் வெளியான “கடல்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்க தொடங்கியது. அதற்காக உடல் எடையை குறைத்து பிட்டாக மாறி சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தார் அதை தொடர்ந்து போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களில் ஹீரோ, வில்லனாக மாறி மாறி நடித்ததால் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
மேலும் அரவிந்த்சாமி வெப்சீரிஸ் பக்கங்களிலும் நடிக்க தற்போது அதிக ஆர்வமாக இருந்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அரவிந்த்சாமி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் அவரது மனைவி மற்றும் மகன் மகள் ஆகியோர் இருக்கின்றனர்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமி போலவே அவரது குடும்பமும் அழகாகவே இருக்கிறது அதிலும் அவரது மகன் அடுத்த அரவிந்தன் போலவே இருக்கிறார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.