முன்னால் உலகழகி ஐஸ்வர்யா ராயின் மகளை பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்

Aishwarya Rai

தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக பட்டிதொட்டியெங்கும் புகழ்பற்று விளங்கியவர் தான் ஐஸ்வர்யா ராய்.

இவர் தமிழில் பிரசாந்துடன் ஜீன்ஸ், அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ரஜினியுடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடித்த இந்த திரைப்படங்கள் எல்லாமே இவரது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இவர் பாலிவுட் சினிமாவின் மெகா ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சனின் மருமகளும் நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியாகவும் சினிமாவில் ஒரு அங்கீகாரமாக நடித்து வருகிறார்.

இவர்  குழந்தை பிறந்த பின்பும் படங்களில் நடித்து வந்தது மட்டுமல்லாமல்  வெளிநாடு நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு ரசிகர்களை குஷி படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இவரது மகளான ஆராதனா தன் தாத்தா அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார் இந்தப் பாடலை கலையகத்தில் ரெக்கார்டிங்க் செய்த போது எடுத்த புகைப்படத்தை அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் அபிஷேக், ஐஸ்வர்யாராய், அமிதாப் போன்ற நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் இந்த புகைப்படம் தற்போது ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.