சினிமாவின் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்து இருந்தவர் மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் இவர் முதலில் நாடக கம்பெனியில் பயணத்தை ஆரம்பித்து நன்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டு வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார்.முதலில் அரவம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
தமிழில் இவர் அழகிய கோலங்கள் படத்தில் நடித்தது தான் என்ட்ரி ஆனார் அதன் பின் தமிழில் இவர் இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, குடும்பம் ஒரு கடம்பம், பன்னீர் புஷ்பங்கள், தில்லு முல்லு என இவர் நடித்த பல படங்கள் சொல்லிக்கொண்டு போகலாம் இதுவரை அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டும் தனது பயணத்தை நிறுத்திக் கொள்ளாமல் இயக்குனராகவும் பல வெற்றி படங்களை கொடுத்து மேலும் எழுத்தாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கியவர். சில தினங்களுக்கு முன் இயற்கை எழுதினார்.
இவரது மறைவு செய்தியை கேட்டு தென்னிந்திய சினிமா உலகத்தையே சோகத்தில் ஆழுத்தியது பல நடிகர் நடிகைகள் சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக கார்த்தி, கமலஹாசன், பிரபு, இயக்குனர் மணிரத்தினம், சீனு ராமசாமி, சத்யராஜ், நடிகை ரேவதி போன்றவர்கள் வந்தனர். பிரதாப் போத்தன் மறைவுக்கு பிறகு அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் வெளி வருகின்றன அந்த வகையில் பிரதாப் போத்தனின் மகள் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
அவருடைய மகளுக்கு தற்பொழுது 31 வயதாகிறது என கூறப்படுகிறது அவருடைய பெயர் கேயா என சொல்லப்படுகிறது தந்தையை போலவே இவரும் கலை துறையை தேர்வு செய்து அதில் பணியாற்றி வருகிறார். இவர் இசைத்துறையில் ஆர்வம் மிக்கவரான கேயா பல பாடல்களை எழுதி பாடி உள்ளதோடு ஒரு இசை குழுவையும் நடத்தி வருகிறார் என சொல்லப்படுகிறது. இதோ நீங்களே பாருங்கள் மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகளை..