தமிழ் சினிமாவில் கடந்த 2016ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இறுதிசுற்று இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.
நடிகை ரித்திகா சிறந்த நடிகை மட்டுமின்றி சிறந்த தற்காப்பு கலை கலைஞரும் ஆவார் அந்த வகையில் இவருடைய குடும்பத்தினர் மூலமாக வாழையடி வாழையாக இவருக்கு இந்தக் கலை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இவருடைய திறனை பார்த்த இயக்குனர் சுதா கொங்கார் அவரை இறுதி சுற்று திரை படத்தில் இவரை நடிக்க வைத்து அழகு பார்த்தார்கள் இவ்வாறு இவர் நடித்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தது.
மேலும் இத்திரைப்படத்தில் பெண்களின் பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் நடிகை ரித்திகாவின் கதாபாத்திரம் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஆண்டவன் கட்டளை சிவலிங்கா போன்ற திரைப்படத்தில் நடித்த நமது நடிகை சொல்லும்படி வெற்றியை அடையவில்லை ஆனால் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படமானது ஓரளவிற்கு வெற்றியை கொடுத்தது தமிழ் சினிமாவில் அவரை நிலைநாட்டியது.
பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகைகளின் சிறுவயது புகைப்படம் பார்க்க அனைவருக்கும் ஆசையாக இருக்கும் அந்த வகையில் தற்போது நடிகை ரித்திகா சிங்கின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது.