தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி மன்னனாக தற்பொழுது மாறி உள்ளவர் யோகிபாபு ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியில் ஒரு ஓரத்தில் பயணித்துக்கொண்டிருந்த யோகி பாபு தனது விடாமுயற்சியின் மூலம் படிப்படியாக வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
சினிமா ஆரம்பத்தில் வில்லனுக்கு அடியாளாக மற்றும் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்து வந்த யோகி பாபு தொடர்ந்து பயணித்து கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. அதில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி அசத்தினார் அதன்பின் இவருக்கு இவ்வுலகில் ஏறுமுகமாகவே அமைந்தது.
பின்பு உச்ச நட்சத்திரங்களாக அஜித், விஜய், விஜய் சேதுபதி போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் இது போதாத குறைக்கு சோலோ படங்களிலும் நடித்து வெற்றியை பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் யோகிபாபுவின் சினிமா பயணம் உச்சத்தில் இருக்கிறது. 2022-ல் கூட பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவர் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார் அண்மையில் கூட மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார் யோகி பாபு. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் யோகிபாபு அண்ணனின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
யோகி பாபுவின் அண்ணன் பெயர் சக்தி யோகராஜா இவர் ஒரு கோயிலைக் கட்டி ஆன்மீக வழியை பின்பற்றி வருகிறார். யோகி பாபுவின் அண்ணன் பௌர்ணமி அமாவாசை ஆகிய தினங்களில் அருள்வாக்கு சொல்லி வருகிறாராம். இதோ யோகி பாபு அண்ணனின் அழகிய புகைப்படம்.