விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து வந்து பிரபலமானவர் நந்தினி. பின்பு கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்தார். மேலும் இவர் வெள்ளித்திரையில் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டுப்பிள்ளை, தர்மபிரபு போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தவர்.
இவர் சின்னத்திரை நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்பொழுது ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர்கள் இருவரும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர்களது காதல் எவ்வளவு ஆழமானது அழகானது என்பதற்காக யோகேஷ் தனது மனைவி நந்தினியின் முகத்தை அவரது நெஞ்சில் டேட்டோ போட்டு காண்பித்தார். இதைப் பார்த்த மக்கள் பலரும் ஆச்சரிய பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பைனல்ஸ் வரை சென்று உள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் டைட்டில் வின் பண்ணுவார்கள் எனவும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். மைனா நந்தினி தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படி செம மாஸ் ஆக சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் வெற்றி நடை கண்டு வருகிறார் நந்தினி. இந்த நிலையில் நடிகை நந்தினி தற்போது அவர் வசித்து வரும் அழகிய வீட்டின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.