நடிகர் சிவகுமார் தமிழில் பல படங்கள் மற்றும் சீரியல்கள் என அனைத்திலும் நடித்து பிரபலம் அடைந்தவர் தற்போது இவரின் மகன்கள் ஆன சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களாக பல சூப்பர் ஹிட் படங்களை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பாலாவுடன் ஒரு திரைப்படம் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுடன் ஒரு திரைப்படம் என இரண்டு படங்களில் கமிட் ஆகி உள்ளார். தற்போது இயக்குனர் பாலாவுடன் இணைந்து நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தி நடித்து வந்த சர்தார் படம் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சிவகுமார் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில்..
அவர்கள் பிறந்து வளர்ந்த பழமையான வீடு ஒன்றை தற்போதும் புதுமையாக பாதுகாத்து வருகிறார். மேலும் கோயம்புத்தூரில் இருக்கும் தனது வீடு மட்டுமில்லாமல் அங்கு உள்ள கோவில்களுக்கு நன்கொடையை வழங்குவது. அந்த ஊரில் உள்ள ஏழை குழந்தைகள் சில பேரை படிக்க வைப்பது போன்ற ஊருக்கான அனைத்து நன்மைகளையும் தற்போதும் செய்து வருகிறாராம்.
இந்த வீட்டுக்கு அவ்வபோது சூர்யா, ஜோதிகா, கார்த்தி, கார்த்தியின் மனைவி போன்ற சிவகுமாரின் குடும்பம் அந்த வீட்டிற்கு சென்று வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் அந்தப் பழமையான வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.