மீடியா உலகில் இருப்பவர்கள் பலரும் அதே தொழிலில் வேலை செய்யும் நபரை திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் அண்மைக்காலமாக சின்னத்திரை, வெள்ளி திரையில் பல்வேறு ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு அசதி உள்ளனர். விக்கி – நயன்தாரா திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது அதனை தொடர்ந்து விஜய் டிவி புகழ் தனது காதலியை திருமணம் செய்தார்.
இவர்களைத் தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் திருமணம் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் பெரிய செய்தியாக இருக்கிறது. இவ்வாறு இருக்க காரணம் இவர்கள் இருவரும் சைலண்டாக திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொண்டது தான் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த ஜோடியை பலரும் வாழ்த்து கூறினாலும் ஒரு சிலர் விமர்சித்தனர் ஆனால் அதுக்கும் அசராமல் இந்த ஜோடி தொடர்ந்து பேட்டி கொடுத்து அதன் மூலம் பதில் அடியும் கொடுத்து வருகிறது. திருமணம் செய்து கொண்ட பிறகு இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றன. மேலும் சில தகவல்களும் வெளிவந்து உள்ளது.
அதாவது தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமிக்காக 300 பட்டுப்புடவை, தங்கத்தால் இழைக்கப்பட்ட கட்டில் என மகாலட்சுமிக்கு பிடித்தவாறு செய்து உள்ளார். மேலும் வீடு ஒன்றையும் மனைவி மகாலட்சுமிக்காக பார்த்து பார்த்து கட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்பொழுது இந்த ஜோடி அழகாக வாழ்ந்து வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று சீரியல் நடிகை மகாலட்சுமி சொன்னது முதல் கணவர் அனிலிற்கு ஒரு வருடத்திற்கு முன்பே இரண்டாவது திருமணம் நடந்து விட்டது எனது மகன் சச்சினுக்காக நான் இரண்டாவது திருமணம் இப்போ செய்து கொண்டேன் என கூறினார். முதல் கணவருடன் மகாலட்சுமி இருக்கும் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.