சத்யராஜின் மகளை பார்த்துள்ளீர்களா.! அவர் என்ன செய்கிறார் தெரியுமா.! இதோ முழு தகவல்

sathyaraj-1-tamil360newz
sathyaraj-1-tamil360newz

Have you seen Satyaraj’s daughter : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக விளங்கியவர் சத்யராஜ் நடிகர் மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியவர், முதன்முதலில் வில்லனாக நடித்து வந்த இவர் தன்னுடைய அசால்ட்டான நடிப்பால் ஹீரோவாக உயர்ந்தார்.

சமீபகாலமாக சத்யராஜ் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார், இவர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணமாக அமைந்தார் இந்த திரைப்படம் இந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்தது.

நடிப்பதைத் தாண்டி சத்யராஜ் பேச்சுத் திறமையில் வல்லவர் மேடையில் பேசி ஏதாவது ஒரு சர்ச்சையான பரபரப்பை ஏற்படுத்துவார், சத்யராஜ் அவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள், சிபிராஜ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சிபிராஜ் திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு குழந்தையும் இருக்கிறது அந்த குழந்தைக்கு அவர்களின் வம்ச பெயரான தீரன் சின்னமலை என்ற பெயரை வைத்துள்ளார்கள், சத்யராஜ் மகனை சினிமாவில் பார்த்ததால் அவருக்கு ஒரு மகள் இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்று, சத்யராஜ் மகள் சினிமா துறையில் இல்லாமல் வேறொரு துறையில் இருக்கிறார்.

sathyaraj-tamil360newz
sathyaraj-tamil360newz

சத்யராஜ் மகள் திவ்யா பிஎச்டி படிப்பிற்கான ஆய்வினை முடித்தவுடன் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார், சில ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா படங்களில் நடிக்கப்போவதாக தகவல் கசிந்தது ஆனால் அந்த தகவல் வெறும் வதந்தி என கூறி மருத்துவ ஆய்வில் மிகப்பெரிய லெவலில் வரவேண்டும் எனக் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

sathyaraj daughter-tamil360newz
sathyaraj daughter-tamil360newz

மேலும் இவர் மருத்துவ தொடர்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக சத்துள்ள மருந்துகளை வழங்க முயற்சிகளை எடுத்து உதவி செய்து வருகிறார் இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

sathyaraj daughter 1-tamil360newz
sathyaraj daughter 1-tamil360newz