சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்தது உண்டா.? இதோ வரலட்சுமி தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம்.

varalaxmi
varalaxmi

சினிமாவுலகில் வாரிசு நடிகர்கள் பலரும் கால்தடம் பதித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து வலம் வருகிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான் ஏனென்றால் அந்த நடிகர், நடிகைகள் அசாதாரணமான திறமை அடுத்தடுத்த படங்களில் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தால் மட்டுமே அடுத்த லெவெலுக்கு செல்ல முடியும் .

அப்படி செய்தால் மட்டுமே அந்த பிரபலத்தை  தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வருவார்கள் ரசிகர்கள். அதை வெளிக்காட்டாத எந்த நடிகர் நடிகையாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தூக்கி எறிவது ரசிகர்களுக்கு கைவந்த கலை.

அதை நன்கு புரிந்து கொண்ட சரத்குமாரின் மகள் வரலட்சுமி சினிமாவில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி அவர்களுக்கு ஈடு இணையாக தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி தான் சரத்குமாரின் மகள் என்பதை வெளி உலகத்திற்கு காட்டினார்.

ஹீரோயின் என்ற ரோலையும் தாண்டி முக்கியத்துவம் உள்ள எந்த ஒரு ரோலாக இருந்தாலும் அதை ஏற்று நடிக்கும் திறனைக் கொண்டுள்ளதால் தற்போது ரசிகர்கள் இவரை மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். சினிமாவில் ஹீரோயின், வில்லி, குணசித்திர நடிகையாகவும் பின்னி பெடல் எடுப்பதால்  தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் வரலட்சுமி சரத்குமார் இருக்கு நல்ல மவுசு இருக்கிறது.

ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பதால் இவர் இன்னும் குறைந்தது 5,6 ஆண்டுகள் தெனிந்திய சினிமாவில் சிறப்பாக வலம் வருவார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரலட்சுமி அவரது அம்மாவுடன் இணைந்து  எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது நடிகர் சரத்குமார் சாயா என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு பிறந்தவர் தான் வரலட்சுமி சரத்குமார்.

2000ம் ஆண்டு முதல் மனைவி சாயா என்பவரை விவாகரத்து செய்துவிட்டு 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் தனது அம்மா சாயா அவருடன் இணைந்து செல்பி எடுத்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை பாருங்கள்.

varalaxmi
varalaxmi