சினிமா உலகில் திறமை மட்டும் இருந்தால் போதாது ராசியும் வேண்டும் என சொல்வார்கள் அந்த வகையில் ஒரே படத்தின் மூலம் உலக அளவில் ஃபேமஸ் ஆனவர் என்றால் அது நடிகர் யாஷ் தான். பிரசாந்த் நில் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படம் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருந்ததால் அந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .
இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது பாகமும் பல வருடங்கள் கழித்து திரையரங்கில் வெளிவந்து முந்தைய பாகத்தை விட பல மடங்கு அதிக வசூல் செய்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎப் 2 திரைப்படம் சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
கேஜிஎப் இரண்டாவது பாகத்தை தொடர்ந்த அதன் மூன்றாவது பக்கமும் உருவாக இருக்கிறது ஆனால் பிரசாந்த் நீல் தற்பொழுது பிரபாஸை வைத்து ஒரு புதிய படம் அதனைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் உடன் ஒரு படம் பண்ண இருக்கிறார். இதனால் கே ஜி எஃப் 3 சற்று தள்ளிப் போகும் என தெரிய வருகிறது.
நடிகர் யாஷும் சும்மா இருக்காமல் மஃப்டி படத்தை இயக்கிய இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இன்று சகோதர சகோதரிகள் தினம் கொண்டாடப்படுகிறது எனவே நடிகர் யாஷ் – க்கு அவரது சகோதரி ராக்கி கட்டிய அழகிய புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..