வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்தவர் தான் மீனா இவர் குழந்தை நட்சத்திரமாக நிறைய திரைப்படங்கள் நடித்து பின்பு கதாநாயகியாக ரஜினி,கமல்,அஜீத் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அட்டகாசமாக நடித்துள்ளார்.
மேலும் இவர் தற்பொழுது ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இவர் எப்படி தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானரோ அதேபோல் இவரது மகளும் விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருப்பார்.
மேலும் சமீப காலமாக இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அந்த வகையில் இவரது கணவர் மற்றும் மகளை நாம் அதிகமாக பார்த்திருக்கலாம் ஆனால் இவரது தாய்,தந்தையை அதிகமாக பார்த்திருக்க முடியாது.
இதையடுத்து இவரது தாய் தந்தை புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்கள்தான் மீனாவின் அப்பா,அம்மா என ஆச்சர்யப்பட்டு கூறிவருகிறார்கள்.