சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்துவின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் மாரிமுத்து இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் மற்றும் யுத்தம் செய்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார் மாரிமுத்து. இவர் வெள்ளித்தறையில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து கொடிகட்டி பறந்தவர் இவர் தற்போது சின்னத்திரையிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக மிரட்டி வருகிறார் நடிகர் மாரிமுத்து தான் அறிமுகமான முதல் சீரியலிலே நடிப்பில் பட்டையை கிளப்பி வரும் மாரிமுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் இந்த நிலையில் இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணம் குணசேகரனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவின் கதாபாத்திரம் தான் என பலரும் கூறி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நடிகர் மாரிமுத்து சீரியலில் தான் வில்லனாக நடித்து வருகிறார் ஆனால் நிஜத்தில் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து வந்த மக்களுக்கு இவர் நிஜத்தில் மிகவும் சாதுவான ஒரு மனிதராக திகழ்ந்து வருகிறாராம் அது மட்டுமல்லாமல் தனது குடும்பத்தினருடன் மிகவும் பாசமாக நடந்து கொள்வாராம்.
மேலும் நடிகர் மாரிமுத்து தனது மனைவி மகன் மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.