மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சொந்த ஊரில் உள்ள பிரம்மாண்ட வீட்டை பார்த்து உள்ளீர்களா.. இதோ புகைப்படம்.!

sivaji-
sivaji-

தமிழ் சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் பிரபலங்கள் எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர். அந்த வகையில் நடிப்பிற்கு பெயர் போன சிவாஜி கணேசன் 70 காலகட்டங்களில் இருந்து தனது பயணத்தை தொடர்ந்தவர்.

அதிலிருந்து எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி நடித்து அசத்துவார். இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவரை பின்தொடர் ஆரம்பித்தனர்.  மேலும் இவரை நடிகர் திலகம் என்ற பெயரைக் கொடுத்து அசத்தினர்.

இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் சிவாஜி அவர்கள் மொத்தமாக 288 படங்களில் நடித்திருக்கிறார் அதில் 250 திரைப்படங்கள் தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி அவர்களை தொடர்ந்து அவரது மகன் பிரபு அவருடைய மகன் விக்ரம் பிரபு என தொடர்ந்து அடுத்தடுத்த வாரிசுகள் நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் மறைந்த நடிகர் சிவாஜி அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் வீட்டின் புகைப்படம் தற்பொழுது வெளிவந்துள்ளது நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரக்கோட்டை கிராமம் அங்கு சிவாஜி அவர்களின் பாரம்பரிய வீடு ஒன்று இருக்கிறது.

அந்த வீட்டை சுற்றி சுமார் 48 ஏக்கர் இடம் உள்ளது அந்த இடத்தில் தற்போது தென்னை மரம் அதிகம் இருக்கின்றது. இதோ நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் தனது சொந்த ஊரில்  வாழ்ந்து வந்த அந்த பழைய வீட்டின் புகைப்படம்.

sivaji house
sivaji house