கிகியின் சகோதரியை பார்த்து உள்ளீர்களா.? வைரலாகும் சாந்தனுவின் கொழுந்தியா புகைப்படம்..!

santhanu

தமிழ் சினிமா உலகில் வாரிசு நடிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர் ஆனால் அந்த நடிகர்கள் சரியான படங்களை கொடுக்க முடியாமல் இன்னும் தட்டு தடுமாறிக் கொண்டுதான் இருக்கின்றனர் அந்த வகையில் வாரிசு நடிகரான சாந்தனு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானாலும்..

கதாநாயகனாக 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சக்கரகட்டி என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சித்து பிளஸ் டூ போன்ற பல்வேறு சிறந்த படங்களில் நடித்தாலும் அதன்பின் இவர் நடித்த முப்பரிமாணம், வாய்மை, வானம் கொட்டட்டும், பாவ கதைகள், குரு போன்ற படங்கள் சுமாராகவே ஓடின.

இருப்பினும் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது சாந்தனு கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் தான் ராவண கூட்டம் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படம் அவருக்கு வெற்றி படமாக மாறும் பட்சத்தில் அவரின் எதிர்காலம் இன்னும் பிரகாசமாக இருக்கும் என தெரிய வருகிறது.

சினிமா உலகில் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் சாந்தனு 2015 ஆம் ஆண்டு கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி பிரபல தொலைக்காட்சியில் தொகுபாளினியாக இப்பொழுதும் இருந்து வருகிறார். கீர்த்தி மற்றும் சாந்தனு தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியீட்டு அசத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த ஜோடி தற்பொழுது ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளது அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் அல்ல கீர்த்தியின் அக்கா தான் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கீர்த்தி தனது அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

keerthy and akka
keerthy and akka
keerthy and akka