நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த கோமாளி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் தற்போது லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கிய நடித்துள்ளார்.
தான்ன் இயக்கிய முதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் இரண்டாவது படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். லவ் டுடே திரைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது அது மட்டும் அல்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் இவானா இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை இவானா தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். லவ் டுடே திரைப்படத்திற்கு முன்பாகவே நடிகை இவானா பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் தான் இயக்குனர் பாலா அவர்கள் நடிகை இவானாவுக்கு பெயர் மாற்றியுள்ளார். ஆனால் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்திற்கு முன்பாகவே இவானா மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை இவானாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதாவது இவானாவின் புகைப்படம் ஒன்று கட் அவுட்டில் இருந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த புகைப்படத்தில் நடிகை இவானாவின் உண்மையான பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்.