இது வீடா? இல்ல பங்களாவா.? ஜிபி.முத்துவின் புதிய வீட்டை பார்த்தீர்களா.!

gp-muthu-1
gp-muthu-1

பிக்பாஸ் பிரபலமும், யூடியூப் பிரபலமுமான ஜிபி முத்து தன்னுடைய புது வீட்டில் குடியேறி பால் காய்ச்சி உள்ளார் இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அதாவது மூன்றாவது வகுப்பு வரையும் படித்திருக்கும் ஜி.பி முத்து தனக்கு சரியாக தொழில் எதுவும் கிடைக்காத காரணத்தினால் டிக் டாக் செய்து பிரபலமடைந்தார் இதில் இவருடைய பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் அருகேவுள்ள உடன்குடி அருகேவுள்ள வெங்கடாசலப்புரத்தை சேர்ந்தவர் தான் ஜிபி முத்து எனவே இவருடைய பேச்சை கொஞ்சம் வித்தியாசமானதாக தான் இருக்கும். மேலும் தொடர்ந்து காமெடி வீடியோக்களையும் வெளியிட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இவருடைய வீடியோக்கள் லரட்சகணக்கில் வியூசுக்களை பெற்றது.

இவ்வாறு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார். எனவே தொடர்ந்து ரசிகர்கள் ஜிபி முத்துவிற்கு கடிதங்களையும் பரிசுகளையும் அனுப்பி வைத்தனர். அவர் அதனை பிரிக்கும் பொழுது வீடியோ எடுத்தும் வெளியிட்டு வந்தார் இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

gp muthu 1
gp muthu 1

இந்நிகழ்ச்சியில் இவருக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது ஆனால் தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக பாதியிலேயே வெளியேறினார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ளார்.

gp muthu
gp muthu

இவ்வாறு சன்னிலியோன் ஹீரோயினாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜிபி முத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார் அதில் தான் புதிய வீட்டிற்கு குடியேறி விட்டதாக அறிவித்துள்ளார். எனவே தன்னுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து புது வீட்டில் பால் காய்ச்சி இனிப்புகள் வழங்கி மகிழும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜி.பி முத்து.