பிக்பாஸ் ஜூலியின் அழகிய வீட்டை பார்த்து உள்ளீர்களா.. இதோ அந்த புகைப்படம்.!

julie-

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி அதன்பின் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தென்பட்டு வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் பெரிய அளவில் பிரபலம் அடைந்தாலும் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்து கொண்ட விதமும் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ஆனால் வெளியே வந்த அவருக்கு வெள்ளி திரையில் ஒன்னு ரெண்டு வாய்ப்புகள் கிடைத்தன அந்த வகையில் நடிகை ஜூலி மன்னர் வகையறா படத்தில் ஒரு சின்ன ரோலில் வந்து போவார் மேலும் அம்மன் தாயே, நான் சிரித்தால் போன்ற படங்களிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் பெரும் அளவு வாய்ப்புகள் வெள்ளித்திரையில்  கிடைக்கவில்லை இருப்பினும் சின்னத்திரையில் அவ்வபோது தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி OTT தளத்தில் நடந்தது இதிலும் ஜூலி கலந்து கொண்டார்.  இதில் நேர்மையாக நடந்து கொண்டதால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்.

வெளியே வந்த அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அசைத்து வருகிறார் ரசிகர்கள் தொடர்ந்து லைக்களை அள்ளி வீசி அசத்துகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஜூலி வாழ்ந்து வரும் வீட்டின் புகைப்படம் வெளிவந்து உள்ளது. அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஜூலி என்னதான் மேக்கப் போட்டுக்கொண்டு பெரிய இடது பெண் போல அழகாக காட்டிக் கொண்டாலும் அவரது குடும்பம் ஒரு மிடில் கிளாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது இதோ நீங்களே பாருங்கள் நடிகை ஜூலியின் வீட்டை..

julie-
julie-
julie-