விஜய் டிவியில் கடந்த வாரம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் மற்ற சீசன்களை விட அதிக அளவில் விஜய் டிவியின் பிரபலங்கள் பங்குபெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களும் முதன்முறையாக பங்கு பெற்றிருக்கும் நிலையில் பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் அசீம். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நாராயணன் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றே இருக்கிறார்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஒரு டாஸ்க் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த பல தகவல்களை பகிர்ந்தார் முழுவதுமாக இவரால் சொல்லி முடிக்க முடியவில்லை. அதில் அவர் கூறியதாவது நான் சினிமா துறையை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டுதான் எனது மனைவி என்னை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு எங்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்தது நாங்கள் பிரியும் நேரத்தில் எனக்கு ஒரு அழகான மகன் பிறந்தார். இவ்வாறு சொல்லி கொண்டிருக்கும்போது ஹவுஸ் மேட்ஸ்கள் முழுவதுமாக சொல்ல விடவில்லை.ஆனால் சிலர் இவருடைய கதையை தொடர்ந்து கேட்டு வந்தார்கள் அதில் அவர் கூறியதாவது எனது மனைவியும் நானும் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால் விவாகரத்து பெற்று பிரிந்தோம் ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கண்டிப்பாக தன் மகனுடன் நான் இருக்க வேண்டும் என்பதை அவசியம் கேட்டுக் கொண்டாராம்.
இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் மன வேதனையான விஷயம் என்றால் தன்னுடைய மகனை பார்க்க முடியாதது தான் என இவர் கூறியிருந்த நிலையில் தற்போது அவருடைய முன்னாள் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் அவருடைய மகனுடன் இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.