பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தனது முகத்தை ரசிகர்களுக்கு பதிய வைத்தவர் தான் பரத் அந்த திரைப்படத்தில் ஜாலியாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அவர் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமாகவில்லை இந்நிலையில் காளிதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
மேலும் பரத் தற்போது சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த திரைப்படங்கள் என்னவென்றால் 8 நடுவன் என்ற தமிழ் படத்திலும் ராதே என்ற ஹிந்திப் படத்திலும் 6 ஹவர்ஸ், கிஷானம் ஆகிய மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் நடித்துவரும் படங்கள் எல்லாம் 2021ல் வெளியாக உள்ளது என தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பரத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படம் என்னெவென்றால் அவர் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படத்தில் தனது மனைவி, மகள், மகன் என ஜாலியாக இருக்கிறார் பரத்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள்.