தமிழ் திரை உலகில் நடிகை கௌதமியை தெரியாத ரசிகர்களே கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு 90s காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக வசந்தமே வருக என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமல்லாமல் ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார். அதன்பிறகு தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் நடிகை கௌதமி கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
மேலும் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் இவர்தான் முதல் பரிசாக இருந்துவந்தார் இதன் மூலமாக பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த நமது நடிகை நடிகர் கமலஹாசனை திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறு கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிக்கும் போது இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். ஆனால் இதற்கு முன்பாகவே 1998-ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இவர்கள் காதல் வாழ்க்கை சரியாக அமையாது தான் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்து விட்டது.
இந்நிலையில் கௌதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். கௌதமி முதல் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது இதில் நடிகை ஜெயலலிதாவும் உள்ளார்.