Actor Narain : திறமை இருப்பவர்களை சினிமா எப்பொழுதுமே கைவிடாது அந்த வகையில் கல்கத்தா வெஸ்ட் பெங்காலில் பிறந்த நரேன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். முதலில் மலையாள படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த இவர் தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படம் இவருக்கு பெரிய வெற்றியை பெற்று தர தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, கோ, முகமூடி, ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து பெண் மத்தியில் இடம் பிடித்து தமிழில் நல்ல இடத்தில் இருந்த இவர்..
திடீரென நரேன் மீண்டும் மலையாளத்தில் அதிகம் கவனம் செலுத்தினார் இதனால் சில வருடங்கள் தமிழில் தென்படாமல் இருந்த இவர் கைதி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அடுத்து கமல் நடிப்பில் வெளியான விக்ரம் பெரிய அளவில் பேசப்பட்டார்.
கடைசியாக இவர் நடித்த இறைவன் படம் வெற்றி நடை கொண்டு வருகிறது. இப்போ தமிழில் வாய்ப்புகளை அள்ளி வருகிறார். கைவசம் “குரல்” படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நரேன் தனது குடும்பத்தை அதிகமாக மீடியா உலகில் காட்டியதே கிடையாது. இந்த நிலையில் தனது மகன், மகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்டார்.
புகைப்படம் உண்டு இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு க்யூட்டான குடும்பம் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நடிகர் நரேனின் அழகிய குடும்பத்தை நீங்களே பாருங்கள்.