தமிழ் சினிமா உலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்து ஓடியவர் முரளி இவரது சினிமா பயணம் 80 களில் ஆரம்பிக்கப்பட்டது அப்பொழுது இருந்து முரளி தொடர்ந்த நல்ல படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
முரளி ஒரு ஹீரோவாக மட்டுமில்லாமல் காமெடியனாகவும் படங்களில் பின்னி பெடல் எடுக்கக்கூடியவர் அதை நாம் சுந்தரா ட்ராவல்ஸ் கூட பார்த்திருக்கிறோம். மேலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்று ஓடிக் கொண்டிருந்த இவருக்கு நலக்குறைவு ஏற்பட்டு 2010 ம் ஆண்டு இறந்தார்.
இவரை தொடர்ந்து இவரது மகன் அதர்வா சினிமா உலகில் தற்போது வெற்றி கொடியை நாட்டு வருகின்றார். அதர்வா நடிப்பில் கடைசியாக வெளியான குருதி ஆட்டம் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ஓடியது. அதை தொடர்ந்து அதர்வா கையில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இருக்கின்றன அதர்வாவும், முரளியும் இணைந்து திரைப்படங்களில் நடித்தும் இருக்கின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது முரளி மற்றும் அவரது மகன் அதர்வாவையும் அனால் முரளி மனைவியை அதிக அளவு வெளியே மீடியாக்களில் காட்டியது கிடையாது ஏதாவது பங்க்ஷன் என்றால் மட்டுமே இருவரும் தென்படுவார்கள்.. இப்படி இருக்கின்ற நிலையில் முரளி உடன் அவரது மனைவி பக்கத்தில் இருக்கும் பழைய புகைப்படத்தை பாருங்கள். இவர்கள் இருவரும் 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் அதர்வா, ஆகாஷ் என இரு மகன்கள் இருக்கின்றனர் மற்றும் காவியா என்ற ஒரு மகளும் இருக்கிறார். முரளி மற்றும் மனைவி ஆகியவர்கள் ஜெயலலிதா அம்மையாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் திருமணத்தின் பொழுது முரளி மற்றும் அவரது மனைவி ஆகியோர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது..