தமிழக மக்களாலும் தமிழ் சினிமாவாலும் எம்ஜிஆர் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு இவர் தமிழ்நாட்டில் தன்னுடைய பெயரை நிலை நாட்டியவர் என்று சொல்லலாம் மேலும் இவர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டையே ஆளும் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
மேலும் 1977 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய உயிர் இந்த மண்ணை விட்டு போகும் வரை மூன்று முறை தமிழக நாட்டை ஆட்சி செய்த முதல் அமைச்சராக இருந்தவர் தான் நடிகர் எம் ஜி ஆர் இவ்வாறு பிரபலமான நமது எம்ஜிஆர் அவர்கள் சக்கர பனிக்கு தம்பி என்பது நமது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இவர் ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்தவர்.
இதனைத் தொடர்ந்து 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தன்னுடைய திரை பயணத்தை தொடங்க ஆரம்பித்தார் அதன் பிறகு இவர் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிக பிரமாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் மக்கள் மனதில் வெகுவாக இடம் பிடித்து விட்டார்.
பின்னர் அரசியலில் நுழைந்த நமது எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார் மேலும் இதன் மூலமாக பாரத ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார் இவ்வாறு பிரபலமான நமது எம்ஜிஆர்க்கு கேரளாவில் பாலக்காடு என்ற இடத்தில் சொந்தமான பூர்வீக வீடு ஒன்று உள்ளது.
மேலும் அந்த காலத்து வீடான எம்ஜிஆரின் வீட்டை தற்போது பொதுமக்களின் பார்வைக்காக சரி செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது அங்கு எம்ஜிஆர் இன் தாய் தந்தையாரின் அழகிய புகைப்படங்கள் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இதோ நமது எம்ஜிஆர் அழகிய வீட்டு புகைப்படம்.