உலக நாயகன் கமலஹாசன் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக இருந்து வருகிறார் இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் படங்களில் போடாத கெட்டப்பே கிடையாது மேலும் படத்திற்காக தனது உடல் எடையை வருத்தியும் நடிக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர். உலக நாயகன் கமலஹாசன் சினிமாவில் ஒரு நடிகராக..
மட்டுமில்லாமல் அவர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட பிரபலமாக சினிமா உலகில் வலம் வருகிறார். கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல் ரீதியாகவும் 420 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மறுபக்கம் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை முடித்துவிட்டு கமலஹாசன் தேவர்மகன் 2, சபாஷ் நாயுடு, வேட்டையாடு விளையாடு 2 போன்ற படங்களில் நடிக்க இருப்பதாக ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கமல் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது உலக நாயகன் கமலஹாசன் தனது குடும்பத்தை பெரிய அளவில்..
மீடியா பக்கம் காட்டவே மாட்டார் குறிப்பாக அவரது அம்மாவை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..