நடிகர் கமலஹாசனுக்கு சொந்த ஊரில் இருக்கும் வீட்டை பார்த்து உள்ளீர்களா.? இதோ புகைப்படம்..!

kamal
kamal

சிவாஜிக்கு பிறகு சினிமா உலகில் அதிக கெட்டப்புகளை போட்டு நடித்தவர் மேலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் துணிந்து நடிக்கக்கூடிய ஒரு ஹீரோவாக இருந்தவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார்.

இவர் கடைசியாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து நடித்து, தயாரித்த திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், ஏஜெண்ட் டினா, மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

மேலும் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது ஆம் இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 400 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது . விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படத்தில் மீண்டும் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சபாஷ் நாயுடு, தேவர்மகன் 2, வேட்டையாடு விளையாடு 2 என பல்வேறு புதிய படங்களிலும்..

ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது இப்போது கமலஹாசன் ஒரு படத்திற்கு சுமார் 100 கோடிக்கு மேல்.. சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனால் கமலஹாசனின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நாம் சினிமா உலகில் இருக்கும் நடிகர் நடிகைகளின் வாழ்ந்து வளர்ந்த வீட்டை பார்த்து வருகிறோம்.

அது போல தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் பரமக்குடியில் வாழ்ந்து வளர்ந்தவர். என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் தற்பொழுது சொந்த ஊரில் அவரிடம் வீடு இல்லை அவருடைய தீவிர ரசிகரான  PT வாத்தியாருமான தமிழரசன் என்பவரிடம் தனது வீட்டை விற்றுஉள்ளதாக  என சொல்லப்படுகிறது. இதோ அந்த வீட்டின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..