தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காமெடி நடிகர் தனது நகைச்சுவை திறமையின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர் இப்படி இருந்தாலும் இந்த காலகட்டத்திலேயும் கவுண்டமணியின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது அந்த அளவிற்கு சினிமா உலகில் நடித்துள்ளார்.
கவுண்டமணி திரை உலகில் இதுவரை 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலும் காமெடியனாக நடித்திருந்தாலும் அதையும் தாண்டி வில்லனாகவும், ஹீரோவாகவும், குணசித்திர கதாபாத்திரங்களும் நடித்து உள்ளார். சினிமா உலகில் தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றியை ருசித்தவர் காமெடி நடிகர் கவுண்டமணி.
இதுவரை அஜித், ரஜினி, பிரபு, கமல், சத்யராஜ் கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்த தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டவர். தொடர்ந்து சினிமா உலகில் வெற்றியை கண்டு ஓடிய கவுண்டமணி கடைசியாக காமெடியனாக நடிக்காமல் ஹீரோவாக மட்டும் நடித்து வந்தார் அந்த வகையில் வாய்மை, எனக்கு எங்கும் வேறு கிளைகள் கிடையாது, 49 ஒ போன்ற படங்களில் நடித்தார்.
அதன் பின் சினிமா பக்கம் தென்படாமல் இருந்து வருகிறார். மீண்டும் சினிமா உலகில் நடிக்க வந்தால் ஹீரோவா தான் நடிப்பேன் என்கின்ற கொள்கையோடு இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி இருந்து வரும் கவுண்டமணி படங்களில் தான் நடிப்பதில்லை என்றால் மேடை நிகழ்ச்சிகளிலும் தென்படாமல் இருந்து வருகிறார் இதனால் கவுண்டமணியை பார்ப்பது மிக அரிதான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் கவுண்டமணி சொந்த ஊரில் வாழ்ந்து வீட்டின் புகைப்படம் ஒன்று தற்பொழுது கிடைத்துள்ளது. கவுண்டமணி பொள்ளாச்சியில் உள்ள பல்லகுண்டாபுரம் கிராமத்தில் பிறந்தார். அங்கு அவர் வாழ்ந்த வீட்டை தற்பொழுதும் பராமரித்து வருகிறார் இதோ நீங்களே பாருங்கள் காமெடி நடிகர் கவுண்டமணி வாழ்ந்து வந்த அந்த வீட்டை நீங்களே பாருங்கள்.