சமீபகாலமாக சின்னத்திரையில் பிரபலமடைந்த சீரியல்களில் நடிப்பவர்களும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு ரீச்சை எட்டி உள்ளனர்.
அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் முதலில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து பேரும், புகழையும் சம்பாதித்தார் கார்த்திக்ராஜ். இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு வெள்ளித்திரையில் பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்ததால் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி தற்பொழுது வெள்ளித்திரை பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார் மேலும் இந்த சீரியலுக்கு முன்பாக அவர் கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற வெற்றி அடைந்த சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இப்படி வளம் வந்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது வெள்ளித்திரை பக்கம்அடி எடுத்து வைத்திருந்தாலும் அவர் என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது இப்படி இருக்க இவர் பிரபல காமெடி நடிகருடன் இவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது .
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி உள்ளனர் காரணம் அதில் கார்த்திக் ராஜ் இளமை பருவத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் வேற ஒரு லுக்கில் இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.